இந்த 16 பேர் சென்னைக்குள் எப்படி நுழைந்தார்கள்? - திடீர் பதற்றம்.. அதிர்ச்சியில் போலீஸ்
வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் எந்த ஆவணமும் இல்லாமல் தமிழகம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அடுத்த மாதம் ஜி20 மாநாடு நடக்க உள்ளது. இதனால் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கேளம்பாக்கம் அருகே படூர் பகுதியில், சாலையோரத்தில் தங்கி இருந்த 16 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 16 பேரும் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்த நிலையில், எந்த ஆவணமும் இல்லாமல் அவர்கள் எப்படி தமிழகம் வந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.