குஜராத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும், ஔரங்கா நதியானது அதன் அபாய அளவை கடந்ததால், வால்சாத் நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.