கொளுத்திய வெயில்... திடீரென சூறாவளியுடன் கனமழை..பிடுங்கி வீசப்பட்ட மின்கம்பங்கள்..பதறிப்போன மக்கள்..
தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சங்கரன்கோவிலில் உள்ள தெருக்களில் மின் கம்பங்கள் அடியோடு நடுரோட்டில் சாய்ந்து விழுந்தன. அதனை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடுமையான வெயிலுக்குப் பிறகு கனமழை பெய்ததால், அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.