"மைதாவை சுவற்றில் எறிந்தால் ஒட்டிக்கொள்வதை போல் ஹன்சிகா.." - பரபரப்பை கிளப்பிய ரோபோ சங்கர் பேச்சு
அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில், உருவாகி இருக்கும் திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது. அப்போது பேசிய ரோபோ சங்கர், ஹன்சிகா ஒரு மெழுகு பொம்மை என்று புகழாரம் சூட்டினார்.