சேமித்து வைத்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய மாற்றுத்திறனாளி சகோதரிகள்
காஞ்சிபுரம் மாவட்டம் களியனூர் கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளிகளான சகோதரிகள் ஜென்னி, சாவித்திரி ஆகியோர் தாங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். இதையொட்டி அவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து பணத்தை வழங்கினர். வாய் பேச, காது கேட்க முடியாத மாற்றுத்திறனாளி சகோதரிகள் செய்த சேவையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்டோர் வெகுவாக பாராட்டினர்.