மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்லறைகள் - மனமுருகி சிறப்பு பிரார்த்தனை

Update: 2022-11-02 16:25 GMT

உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இன்று கல்லறைத் திருநாளைக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் கிறிஸ்தவர்கள் மறைந்த தங்கள் உறவுகளின் கல்லறையில் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் பங்கு ஆலயங்களைச் சேர்ந்த அனைத்துக் கல்லறைகளிலும் இறந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக கல்லறைகளில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. புதுச்சேரியில் உப்பளம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, வில்லியனுர், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறைகளை சுத்தம் செய்து வண்ண பூக்களைக் கொண்டு அலங்கரித்து கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினர். தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் ஏராளமான கிருஸ்துவர்கள் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்கள் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர்களை தூவியும் கல்லறை முன்பு அமர்ந்து ஜெபம் செய்து வழிபட்டனர். கோவையில் உள்ள கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களை நினைத்து உறவினர்கள் கண் கலங்கி பிரார்த்தனை செய்தனர். இறந்தவர்களின் நினைவாக சிலர், ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடைகள் வழங்கினர்.  

Tags:    

மேலும் செய்திகள்