பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி சென்றார் ஆளுநர் ரவி

Update: 2023-07-08 02:00 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு வார பயணமாக டெல்லி சென்றார். சென்னையில் இருந்து மாலை 4.55 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், தாமதம் ஆனதால், மாலை 6.30 மணிக்கு பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவர், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் தங்கி இருக்கும் ஆளுநர், வரும் 13-ஆம் தேதி இரவு சென்னை திரும்புகிறார். தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்