"பெண்களை கடத்தும் அரசு தன்னார்வலர்கள்" - வெடித்த சர்ச்சை - பவன் கல்யாண் மீது பாய்ந்தது வழக்கு
ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் மீது ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் அரசு சார்பில் செயல்படும் தன்னார்வலர்கள் உதவியுடன் பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள், விஜயவாடா அருகே உள்ள கிருஷ்ணலங்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்று கொண்ட போலீசார் பவன் கல்யாண் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.