டோல்கேட் ஊழியர்களால் சிறை பிடிக்கப்பட்ட அரசு பேருந்து! -ஆவேசமடைந்த பயணிகள் |விக்ரவாண்டியில் பரபரப்பு

Update: 2022-10-24 06:18 GMT

சென்னையில் இருந்து அரியலூர் சென்ற அரசு பேருந்து சுங்கவரி ரீசார்ஜ் கட்டணம் முடிந்து போனதால், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே பேருந்து ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. சுங்கவரி ரீசார்ஜ் முடிந்ததை பற்றி அறியாமல் சென்றதால், பேருந்து சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரம் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டதால், பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், சுங்கச்சாவடி ஊழியர்கள் அரசு பேருந்தை அந்த வழியாக செல்ல அனுமதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்