வீட்டில் தனியாக தூங்கிய பெண்... கழுத்தை அறுத்து தாலி செயின் பறிப்பு - கொடூர கொள்ளையர்கள் வெறியாட்டம்

Update: 2023-05-01 08:27 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்து பெண்ணை கொன்று 17 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டப்பிடாரம் அருகே மேலமுடிமன் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், மகன் கோவில்பட்டியில் உள்ள ஹோட்டலில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த இந்திராணி, சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டினுள் புகுந்த மர்நபர்கள் இந்திராணியை கொன்று கழுத்தில் இருந்த தாலி செயின் உட்பட 17 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தப்பிச்சென்றுள்ள மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்