"தஞ்சை மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு?" - அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2022-08-19 15:14 GMT

தஞ்சாவூர் மாப்பிள்ளை சம்பா அரிசி உள்ளிட்ட 23 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் நடைபெறும் புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருள்களுக்கான கண்காட்சியைத் துவக்கி வைத்த அவர், செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை பள்ளிகளில் கண்காட்சியில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்