அரசு வணிக வளாகத்தில் கேங் வார்... கண்மூடித்தனமாக தாக்குதல்... - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி
தஞ்சாவூரில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டு கும்பலை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இரண்டு கும்பலை சேர்ந்தவர்கள், ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை.