சுந்தர் பிச்சை முதல் அமேசான் சி.இ.ஓ வரை... டாப் CEOக்களுடன் பேசிய பிரதமர் மோடி
அமெரிக்காவில் பிரதமர் மோடியை கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து சுந்தர் பிச்சை பேசுகையில், இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கலுக்காக, இந்தியாவில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா நோக்கம் மற்ற நாடுகளுக்கு, ஒரு வரைபடம் போன்றது எனவும் புகழாரம் சூட்டினார்.
அமெரிக்காவில், பிரதமர் மோடியை அமேசான் நிறுவன சி.இ.ஒ. ஆண்ட்ரூ ஜாஸி சந்தித்தார். இதையடுத்து, இந்தியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகளை அமேசான் நிறுவனம் உருவாக்கவுள்ளதாக, அதன் சி.இ.ஒ. தெரிவித்தார். மேலும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை டிஜிட்டல் மயமாக்கி உலக அளவில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.