இரவு பகலா ஆட்டம் காட்டிய தீ... திடீர் மழையில் அடங்கிப்போனது -மகிழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த 5 நாட்களாக அச்சுறுத்தி வந்த காட்டுத்தீயை அணைத்து வனங்களைக் காப்பாற்றியுள்ளது மழை...
அடுக்கம், கும்பக்கரை, புலிக்கூடு, சின்னூர், ஈச்சமலை மற்றும் முருக மலை உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகளில் நாள்தோறும் பல இடங்களில் காட்டுதத் தீ பற்றி எரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் தொடர்ந்து பற்றி எரிந்து வந்த காட்டுத்தீ முழுமையாக கட்டுக்குள் வந்து.
தீயணைப்புப் பணியில் இரவு பகலாக ஈடுபட்டி வந்த வன காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...