ட்விட்டரில் அதிக followers உள்ளவர்களுக்கு - எலன் மஸ்க் கொடுத்த அதிர்ச்சி update | Twitter
பல்வேறு நாடுகளின் தேர்தல்களில் டிவிட்டர் தலையிட்டுள்ளதாக, அதை சமீபத்தில் வாங்கியுள்ள எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அதை சீர்படுத்த ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விசியங்களில் டிவிட்டர் தோல்வியடைந்துள்ளதாகவும், பல்வேறு நாடுகளின் தேர்தல்களில் தலையிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் டிவீட் செய்துள்ளார்.
இனி டிவிட்டர் நடுநிலைமையுடன், வெளிப்படைத்தன்மை கொண்ட முறையில், சிறப்பாக செயல்படும் என்று உறுதியளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டர் நீக்கப்படும் என்ற சந்தேகம் நிவர்த்தியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கை எலான் மஸ்க் சமீபத்தில் சந்தித்து பேசிய பின், இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள
மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.