தமிழ்நாட்டில் சென்னை, வேலூர் உட்பட 16 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக நேற்றும் வெப்பம் சதம் அடித்துள்ளது. நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் பகுதியில் 105 புள்ளி 44 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிக அளவாக வேலூரில் 108 புள்ளி 14 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், திருத்தணியில் 105 புள்ளி 8 ஃபாரன்ஹீட்டாகவும் பதிவாகியுள்ளது. இதே போன்று, திருச்சி, தஞ்சை, கடலூர், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, நாகை, நாமக்கல், சேலம், பாளையங்கோட்டை உட்பட 16 இடங்களில் வெயில் நூறு டிகிரிக்கும் கூடுதலாக பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 102 டிகிரி ஃபாரன்டிட் வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.