- விமானங்களின் புறப்பாடு ஆறு மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடு அல்லது முழு கட்டணத்தையும் திரும்ப அளிக்க வேண்டும் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
- இது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள, மத்திய விமான போக்குவரத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், விமானங்கள் புறப்பாடு 2 மணி நேரம் அல்லது அதற்கும் கூடுதலாக தாமதமானால் பயணிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி போன்றவை வழங்க வேண்டும் என விமான போக்குவரத்து இயக்குனரக வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
- 6 மணி நேரத்திற்கும் மேல் விமானப் புறப்பாடு தாமதமானால் ஆறு மணி நேரத்திற்குள் மாற்று விமான ஏற்பாடு அல்லது பயணிகளுக்கு முழு விமான கட்டணமும் திரும்ப அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.