சிவகங்கை அருகே ஊரணியில் ஊத்தா மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், செட்டியா ஊரணியில் நீர் வற்றியதை தொடர்ந்து, ஊத்தா கூடை முறையில் மீன் பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக மீன்களை பிடித்தனர்.