இந்தியாவில் முதல் வேட்டை.. 24 மணி நேரத்திற்குள் புள்ளிமானை புசித்த ஆப்பிரிக்க சீட்டாக்கள்

Update: 2022-11-08 04:08 GMT

இந்தியாவில் 1952ம் ஆண்டே ஆசிய சீட்டாக்கள் அழிந்துவிட்டதாக அறிவித்த மத்திய அரசு, ஆப்பிரிக்க சீட்டாக்களை கொண்டுவர முயற்சித்தது.

இதன்படி நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 8 ஆப்பிரிக்க சீட்டாக்களை பிரதமர் மோடி தனது பிறந்த நாளில், மத்திய பிரதேசம் குனோ தேசிய பூங்காவிடம் ஒப்படைத்தார்.

பிற கண்டத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சிறுத்தைகளின் உடல்நலம், சுற்றுச்சூழல் பழக்கம் குறித்து அங்கு கண்காணிக்கப்பட்டது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த சீட்டாக்களில் 2 ஆண் சீட்டாக்கள் ஞாயிறு அன்று பூங்காவில் திறந்த வெளிக்கு விடப்பட்டது.

அந்த சீட்டாக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் புள்ளிமானை வேட்டையாடி புசித்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மண்ணில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் வேட்டையை தொடங்கிய ஓட்ட நாயகனை இணையத்தில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்