2007 -ல் தந்தை.. 2023 -ல் மகன்… நூலிழையில் மாஸ் காட்டிய நெதர்லாந்து - சூடு பிடிக்கும் உலகக்கோப்பை

Update: 2023-07-07 16:00 GMT

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாட, நெதர்லாந்து அணி தகுதிபெற்றுள்ளது... அது பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு


2023ம் ஆண்டுக்கான ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், தொடரில் போட்டியிட நெதர்லாந்து அணி தேர்வாகியுள்ளது....


2023ம் ஆண்டு ஐசிசி 50 ஓவர் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்கள் நடந்து வருகின்றது. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாகவே விளையாட தகுதிபெற்றுவிட்டன. மீதமுள்ள 2 அணிகளுக்கான தகுதிச்சுற்றுக்கள் ஜிம்பாப்வேயில் நடந்து வரும் நிலையில், இதில் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் "ஏ" பிரிவில், நேபாளம், நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டன. "பி" பிரிவில் ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. இந்த ஆட்டங்களின் முடிவில் "ஏ" பிரிவில் நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாவே அணிகளும்,"பி" பிரிவில் ஓமன், ஸ்காட்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளும் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. இதில் ஒவ்வொரு அணியும், எதிர் அணியுடன் ஒவ்வொரு முறை மோத வேண்டும். இதில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்லும்.

2வது அணியாக தகுதி பெறுவதில், நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கடுமையாக மோதிவந்தன. அதற்கான இறுதி போட்டியும் பலத்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 50 ஓவரின் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை குவித்திருந்தது,

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், களமிறங்கிய நெதர்லாந்து அணி, தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்ட துவங்கியது.42.5 ஓவர்களிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 50 ஓவர் உலகக்கோப்பை தகுதிசுற்றின், இறுதிப்போட்டியில், இலங்கை அணியுடன்,நெதர்லாந்து மோதுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்