திருப்பூரில் 12 மணி நேரம் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில், போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு கலைந்து சென்றனர்.
திருப்பூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற விவசாயிகள், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடிக்காமல், நீர் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைத்த விவசாயிகள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுடன் காவல் துணை ஆணையர் வனிதா தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 12 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.