பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் பிரார்த்தனை

Update: 2023-04-12 10:47 GMT

நடிகை விசாகா சிங், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை விசாகா சிங்.

நடிப்பு மட்டுமின்றி ஃபேஷன் டிசைனிங் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்டவராக அறியப்படும் இவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாறி வரும் சீதோஷ்ண நிலையினால் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்