போலீசிடம் சிக்காமல் இருக்க முகத்தில் சர்ஜரி செய்த பிரபல கடத்தல் மன்னன்.. முகத்தை மாற்றியும் சிக்கியது எப்படி?
- தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல் ஆசாமி போலீசிடம் மாட்டாமல் இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொரியாவைச் சேர்ந்தவரைப் போல் முகத்தை மாற்றியும் கூட வசமாக காவல்துறையிடம் சிக்கியுள்ளார்...
- சஹாரத் சவாங்ஜேங் என்ற 25 வயது போதைப்பொருள் கடத்தல் ஆசாமி, தனது உண்மையான அடையாளத்தை மறைக்க முயன்று சியோங் ஜிமின் என்ற கொரிய பெயரை மாற்றிக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி பல செய்து தனது முகத்தையே அடையாளம் தெரியாதளவுக்கு மாற்றியுள்ளார்...
- இருப்பினும் தொடர் கண்காணிப்பின் மூலமாக பாங்காக்கில் அவரைப் போலீசார் வசமாக பிடித்தனர்...
- போலீசிடம் சாட்சி சொல்லியவர்கள் கூட சஹாரத்தை "அழகான கொரிய நபர்" என்றே விவரித்துள்ளனர்..
- . நேரில் சென்று பார்த்த போது, முகமே முற்றிலும் மாறி இருந்ததால் முதலில் காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்றறியாமல் விழித்துள்ளனர்..
- . தான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்பதற்காகத் தான் முகத்தை மாற்றியதாக சஹாரத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.