பாட்டிலுக்கு எக்ஸ்ட்ரா 10 | ஆட்சியரின் அதிரடி ரெய்டு! வசமாக சிக்கிய ஊழியர்

Update: 2023-07-07 02:30 GMT

மயிலாடுதுறை அருகே டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மார்க் ஊழியரை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். செம்பனார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கடை உதவி விற்பனையாளர் ரவிச்சந்தரன் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக பத்து ரூபாய் சேர்த்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அரசு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ரவிச்சந்திரனை தற்காலிக பணிநீக்கம் செய்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்