"அதிகமாக உள்ள ஆர்டர்லி காவலர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்"... டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஆடர்லி முறை ஒழிப்பு குறித்து நீதிமன்றம் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது
டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏடிஜிபிக்கள் மகேஷ் குமார் அகர்வால் ஏடிஜிபி சங்கர் ஐஜி லோகநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்
மாவட் எஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி டிஜிபி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக் கூடிய ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி ஜி பி சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருக்கிறார்
இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது