ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட ஆட்சியர் எழுதிய கடிதம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தை 1 மணி நேரம் குறைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி பரிந்துரை செய்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, விதிமுறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால், தற்போது கொரோனா பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததால் வாக்குப்பதிவு நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றியமைக்குமாறு பரிந்துரைத்து கடிதம் எழுதியுள்ளார்.