"பிரசாரத்தில் அமைச்சர் அன்பிலை சந்தித்தேன்.. அவரும் அதே சாலையில் தான் பயணிக்கிறார்" - நாதக வேட்பாளர் மேனகா பரபரப்பு பேச்சு
ஈரோடு கிழக்கு தொகுதியில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரச்சாரத்தின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்ததாகக் கூறிய அவர், அமைச்சரும் தரமற்ற சாலையில்தான் பயணம் செய்ததாக குறை கூறினார்.
ஆளுங்கட்சிக்கு மக்களின் ஓட்டுதான் தேவை என்றும் விமர்சித்தார்.
திராவிட கட்சிகளுக்கு காசுக்காக வாக்களிப்பவர்கள், இத்தேர்தலை விழிப்புணர்வுடன் அணுக வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா கேட்டுக்கொண்டார்.