நாளை அதிகாலை 2.30 வரை தான் எலான் மஸ்க்கிற்கு காலக்கெடு | Elon Musk | Twitter | ThanthiTV
வரும் அக்டோபர் 28 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்குள் ட்விட்டரை வாங்க வேண்டிய கட்டாயத்தால் உள்ளார், எலான் மஸ்க்.
இந்திய மதிப்பு படி, சுமார் 3.36 லட்சம் கோடி ரூபாய் கொடுத்து ட்விட்டரை வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதமே எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இடையில் ட்விட்டர் ஒப்பந்ததாரர்களுக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில், செப்டம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு எலான் மஸ்க் வாங்கி கொள்ள ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்திருந்தனர். இதனால் எலான் மஸ்க் வசமே ட்விட்டர் செல்லும் என மீண்டும் பேசப்பட்டது. ஆனால் நீதிமன்றம் விடுத்துள்ள கால அவகாசத்தின் படி, வருகின்ற 28 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்குள் ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.