1,000க்கும் மேற்பட்ட படங்கள்.. புகழ்பெற்ற குரல் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி காலமானார்
தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி, மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 55. இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ள இவர், தெலுங்கில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் அனைத்து படங்களுக்கு ஆஸ்தான டப்பிங் கலைஞராக இருந்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீனிவாச மூர்த்தி, மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.