திமுக MLA-வுக்கு அஞ்சாத DSP.. "ஓட்டு போட்டதுக்கே வெட்கப்படுறேன்" - வெளுத்து வாங்கிய Ex ஊராட்சி தலைவர்.. தீயாய் பரவும் புதிய ஆடியோ

Update: 2023-06-13 07:18 GMT

பட்டுக்கோட்டை நீர்நிலை பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் அள்ளிய விவகாரத்தில், ஆளும் கட்சியினரின் வாகனங்களை விடுவிக்க கோரி, திமுக எம்எல்ஏ டிஎஸ்பியிடம் பேசிய பரபரப்பு ஆடியோ சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தில், குளத்து மண் அள்ளுவதற்கு கிட்டத்தட்ட 3 மீட்டர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனையும் தாண்டி, ஆளுங்கட்சியினர் 20 அடிக்கு மேல் மண் அள்ளுவதாகவும், அனுமதிக்கப்பட்ட கால அளவை தாண்டி சட்டவிரோதமாக மண் எடுப்பதாகவும், அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்து, உடனடியாக மண் அள்ளுவதை நிறுத்த சொல்லி உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், டிஎஸ்பி பொறுப்பு வகிக்கும் பாலாஜி உத்தரவின் பெயரில், இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மண் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில், டிஎஸ்பி பாலாஜியை செல்போனில் தொடர்புகொண்ட பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான அண்ணாதுரை, தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென கூறியதாகவும், அதற்கு தாசில்தார் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். வாகனங்களை விடுவிக்க சொன்னால், டிஎஸ்பி அனுமதியின்றி தரமுடியாது என போலீசார் கூறுவதாக எம்.எல்.ஏ அண்ணாதுரைதெரிவித்து இருக்கிறார்.

அப்போது குறுக்கிட்ட டிஎஸ்பி பாலாஜி, விவகாரம் மேல் இடத்திற்கு சென்றுவிட்டதால், வழக்கு பதியாமல் வாகனங்களை தர முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ அண்ணாதுரை, நானும் வக்கீல்தான் எனக்கூறியதுடன், இந்த விவகாரத்தில் தாசில்தார் அனுமதிக்கும் பட்சத்தில் நீங்கள் யார் என டிஎஸ்பியிடம் கேள்வி எழுப்பினார்.அப்போது வழக்கு பதியாமல் வாகனங்களை தர முடியாது என டிஎஸ்பி கூறியதால், இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் பரபரப்பாக இருந்தது.

திமுக எம்எல்ஏ - போலீஸ் வாக்குவாதம்

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக, கலையரசன், மணியரசன், குமார், ஸ்ரீதர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போலீஸ் அதிகாரியை மிரட்டியதை கண்டித்து, திமுக எம்எல்ஏ அண்ணாதுரையை, சொந்த கட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி விமர்சித்த ஆடியோ வெளியாகி, திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவத்தில், கலையரசன், மணியரசன், குமார், ஸ்ரீதர் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்