ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு - நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்

Update: 2022-11-14 02:15 GMT

கல்பாக்கம் ஈசிஆர் சாலையில், ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு திடீரென்று வலிப்பு வந்ததால், எதிரில் வந்த மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த பேருந்தின் ஓட்டுனர் ராதாகிருஷ்ணனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதால், அருகில் இருந்த நடத்துனர் பேருந்தை நிறுத்த முற்பட்டார். இருப்பினும், இவர்களின் பேருந்து, எதிர்த்திசையில் வந்த மற்றொரு அரசு பேருந்து மீது மோதி நின்றது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை.

சம்பவம் அறிந்து வந்த கல்பாக்கம் போலீசார், ஓட்டுனர் ராதாகிருஷ்ணனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்