Variety Variety-யா குடிக்கலாம்..! சென்னை - புதுச்சேரி' மதுபிரியர்களுக்கான குளு குளு Tour
சென்னையில் இருந்து 30 இருக்கைகள் கொண்ட சொகுசு பேருந்து மூலம் புதுச்சேரிக்கு அழைத்து வந்து புதுச்சேரியின் முக்கிய இடங்களை பார்வையிட வைத்த பின்னர் நகரப்பகுதியில் கட்டமரான் என்ற விடுதியில் பாரம்பரிய வகையில் தயாரிக்கப்படும் பீர் வகைகளை நேரடியாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பழ வகைகளான கொய்யா, நாவல், பலாப்பழம், மாம்பழம், ஆப்பிள், செர்ரி, ஸ்ட்ராபெரி, கொத்தமல்லி, ஆரஞ்சு தோல், செம்பருத்தி, சங்கு பூ மற்றும் சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் பீர்கள் பார்வையிட மாட்டுமின்றி விருப்பப்படுபவர்களுக்கு அருந்த வழங்கப்படுகிறது, மேலும் இந்த வகை பீர்களில் போதையின் அளவு குறைவு என்று என்றும் கோவா போன்ற மாநிலங்களில் இதுபோன்று பீர் தயாரிக்கு பகுதியை சுற்றிப்பார்க்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் இந்த பயன ஏற்பட்டை செய்துள்ளாதக பயன ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் எக்காரணம் கொண்டும் பேருந்திலே அல்லது சுற்றிப்பார்க்கும் சுற்றுலாத்தளங்களில் பீர் வழங்கவும், குடிக்கவும் அனுமதி இல்லை என்றும் தங்களது உணவகத்தை பார்வையிட்ட பின்னர் பீர் வகைகள் மற்றும் புதுச்சேரியின் பிரென்ச் உணவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
பீர் பஸ்சில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து சுற்றிப்பார்த்த பின்னர் அன்று மாலையே மீண்டும் சென்னையில் சுற்றுலாப்பயணிகள் விடவும் திட்டமிட்டுள்ளனர்.