மின்கம்பத்துடன் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்! - "மின்சாரம் பாய்ந்து விடுமோ" என மக்கள் அச்சம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணிம்பாடி அருகே மின் கம்பத்துடன் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜாபராபாத் பகுதியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாய் அமைப்பதற்கு அதிருப்தி தெரிவித்த அப்பகுதியினர், மின்கம்பத்தை அகற்றாமல் அதனுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறியுள்ளனர். கால்வாயில் தண்ணீர் செல்லும் போது மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.