தூக்கி வீசி மோர் பாக்கெட்டுகள் விநியோகம் - தெலுங்கானா முதல்வர் பங்கேற்ற நிகழ்வில் அதிர்ச்சி...

Update: 2024-11-20 11:33 GMT
  • தெலங்கானாவில், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், பொதுமக்களுக்கு மோர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி ஓராண்டு நிறைவடைந்த நிலையில் வாரங்கலில் விஜயோற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டு, மக்கள் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். பொதுக்கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்காக லாரியில் மோர் பாக்கெட்டுகள் கொண்டு வரப்பட்டு தூக்கி வீசப்பட்டன. எனினும், பொதுமக்கள் அதனை போட்டி போட்டு எடுத்துச் சென்றனர். இந்நிலையில், மோர் பாக்கெட்டுகளை கூட முறையாக பங்கிட இயலாத ஒரு ஆட்சி தெலங்கானாவில் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்