"தமிழகத்தை குறிவைத்து அரசியலாக்காதீர்கள்" உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து

Update: 2023-01-10 06:05 GMT

"தமிழகத்தை குறிவைத்து அரசியலாக்காதீர்கள்" உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து


கட்டாய மதமாற்றம் தீவிரமான விவகாரம் என உச்சநீதிமன்றம், தெரிவித்துள்ளது.

பணம், பரிசுப் பொருள் அளித்து செய்யும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி, பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. திங்கள் கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, இந்த விவகாரத்துக்கு அரசியல்சாயம் பூச வேண்டாம் எனவும் தமிழக அரசின் கருத்தை மனுவாக தாக்கல் செய்யுங்கள் என்றும் இந்த விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க விரும்புகிறோம் எனவும் நீதிபதிகள் தெளிவுப்படுத்தினர்.

ஒரு மாநிலத்தை மட்டும் குறி வைப்பதாக நினைத்து, மதமாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என குறிப்பிட்டதுடன், கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான விவகாரம் என்பதால், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், இந்த வழக்கில் உதவ வேண்டும் என்றும் தெரிவித்து விசாரணையை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்