போதைப்பொருள் கடத்தல் கேங் முன்னாள் டிஜிபி மகன் உட்பட மொத்தமாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்
சென்னையில் போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் நந்தம்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் போதையில் நடந்து சென்ற இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பிடிபட்டவர்கள் முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் அவருடைய நண்பர் மெக்களன் எனவும், இருவரும் கோக்கைன் போதைப் பொருட்களை உட்கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அருண் தமிழகத்தில் முன்னாள் டிஜிபி ரவீந்தரநாத்தின் மகன் என்பதும் பிரபல ஐடி கம்பெனியில் வேலை பார்த்துவருவதும் தெரியவந்துள்ளது. இருவரும் கோக்கைன் போதைப் பொருட்களை அண்ணாநகரில் உள்ள நைஜீரிய நாட்டை சேர்ந்த எரிக்ஷன் ஜானிடம் வாங்கிய தெரியவந்துள்ளது. மேலும் எரிக்ஷன் ஜானிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி அருண் விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.