பிரதமர் மோடியின் பிரசாரத்தில் பணப்பட்டுவாடா..! - கர்நாடக தேர்தலில் சலசலப்பு - வெளியான பரபரப்பு வீடியோ

Update: 2023-04-30 12:48 GMT

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கி உள்ளார். மைசூரு சாலையில் ஊர்வலமாக சென்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். கொடச்சி தொகுதியில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக செல்ல வரவழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு வரவழைக்கப்பட்டிருந்த இளைஞர்களுக்கு, 500 ரூபாய் வழங்கப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. கொடச்சி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜீவின் ஆதரவாளர்கள் பணம் வழங்கியதாக கூறப்படும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது,.

Tags:    

மேலும் செய்திகள்