"குடிப்பேன் டா... கையவச்சி பாருடா.." - ஆபாசமா பேசி அட்ராசிட்டி... சிறப்பான சம்பவம் செய்த போலீசார்
சென்னை, வியாசர்பாடி ஏ.ஏ ரோடு மேட்டுப்பாளையம் சுரங்கப்பாதை சந்திப்பில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த பிரகாஷ் மதுபோதையில் இருந்ததுடன், தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி அபராதம் செலுத்த மறுத்து, தனது நண்பர்களை தொலைபேசியில் அழைத்தார். அதன்படி, அங்கு வந்த மூவரும் மதுபோதையில் இருந்த நிலையில், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார், மதுபோதையில் இருந்தவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்த பிரகாஷ் வழக்கறிஞர் இல்லை என்பதும், அவரை அழைத்துச்செல்ல வந்த 3 பேரில் மணிக்குமார், லோகேஸ்வரன் ஆகியோர் வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவலர் சிவகுமார் அளித்த புகாரின்பேரில்,