அத்துமீறிய டாக்டர்.. மனைவியும் உடந்தை - நர்ஸ் எடுத்த விபரீத முடிவு
தனியார் மருத்துவமனை மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக கூறி, செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் மருத்துவமனை மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக கூறி, செவிலியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே தனியார் மருத்துவமனையில், 2 குழந்தைகளுக்கு தாயான 24வயது பெண் ஒருவர் செவிலியராக பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த 20ஆம் தேதி பணிக்கு சேர்ந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி மருத்துவர் முரளி அழைப்பின் பேரில், அவருடன் ஓ.பி. பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மருத்துவரிடம் மனைவியிடம் செவிலியர் முறையிட்டுள்ளார். எனினும், அதுகுறித்து யாரும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், மருத்துவர் முரளியின் மனைவியும் மருத்துவருமான விமலாதேவி அங்கு பணிபுரிவதால், சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. எஸ்.பி. தலையீட்டைத் தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில், தற்போது மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பல்வேறு பெண்கள் பாதித்துள்ளதாக செவிலியர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.