பொதுமக்களிடம் மிரட்டும் தோனியில் பேசும் திமுக கவுன்சிலர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
சேலத்தில், பொதுமக்களிடம் திமுக கவுன்சிலர் மிரட்டும் தோனியில் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சேலம் மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் சர்க்கரை சரவணன். வார்டுக்கு உட்பட்ட காசக்கரனூர் மாரியம்மன் கோவில் பகுதியில், குடிநீர் குழாய் பதிப்பதில், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும், சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களை மிரட்டும் தோனியில் கவுன்சிலர் சர்க்கரை சரவணன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.