பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்..சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

Update: 2023-06-12 08:34 GMT

பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நார்வே வீரர் காஸ்பர் ரூட் உடன் ஜோகோவிச் மோதினார். இந்த போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், முதல் செட்டை டை-பிரேக்கரில் 7க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். 2வது செட்டிலும் அதிரடியாக ஆடிய ஜோகோவிச், 6க்கு 3 என்ற கணக்கில் அதனை வென்றார். பின்னர் 3வது செட்டை 7க்கு 5 என்ற கணக்கில் வசப்படுத்திய ஜோகோவிச், 3வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை முத்தமிட்டார். மேலும் ஒட்டுமொத்தமாக ஆடவர் டென்னிஸில் 23வது கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோகோவிச், நடாலைப் பின்னுக்குத் தள்ளி, அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்