தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது காற்று மாசு குறியீட்டு அளவில் தெரியவந்துள்ளது. டெல்லியின் சராசரி காற்று தரக் குறியீடு 323 புள்ளியை தொட்டுள்ளது. அரசு, காற்றுதர குறியீட்டை 6 வகைகளாக தரம் பிரித்துள்ளது. அதன்படி, பூஜ்ஜியத்தில் இருந்து -50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51லிருந்து-100 புள்ளிகள் வரை இருந்தால் மிதமானது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் 101லிருந்து - 150 புள்ளிகள் இருந்தால் உடல்நலத்துக்கு தீங்கானது என்றும் 300க்கு மேல் தாண்டினால் அது மிகவும் அபாயகரமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி தடையை மீறி பட்டாசு வெடிக்க பட்டதால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.