வீட்டை ஜப்தி செய்ய சென்ற போலீசாருக்கு வீட்டு உரிமையாளர் கொடுத்த அதிர்ச்சி - திண்டுக்கல்லில் பரபரப்பு
- திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், வீட்டை ஜப்தி செய்ய போலீசார் சென்றபோது, வீட்டின் உரிமையாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- செம்பட்டியைச் ஜீவா, மொக்கவீரம்மாள் தம்பதி, சின்னாளப்பட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியிடம் வீட்டை அடமானம் வைத்து 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
- கடனைத் திருப்பிச் செலுத்தாததால், திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவின்பேரில், மொக்கவீரம்மாள் பெயரில் இருந்த வீடு, தமிழ்ச்செல்வியின் பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
- இதையடுத்து, வீட்டை ஜப்தி செய்ய கடந்த 3-ஆம் தேதி, நீதிமன்ற ஊழியர்கள் சென்றபோது, மொக்கவீரம்மாளும், அவருடைய உறவினர்களும் தடுத்து விட்டனர்.
- அதைத் தொடர்ந்து, போலீசார் இன்று மீண்டும் சென்றபோது, மொக்கவீரம்மாளும், அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 4 குடும்பத்தினரும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
- அப்போது, மொக்கவீரம்மாள் திடீரென மண்ணென்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
- போலீசார் அவரை தடுத்து காப்பாற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.