கமல்ஹாசன் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் மிகப்பெரிய ஹிட்டான 'வேட்டையாடு விளையாடு' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
என்னோட சினிமா கரியர்குள்ள கமல் சார் அப்டி கேட்ட தொறந்து வரனும்னு தான் அப்டி ஒரு ஓபனிங் சீன் வெச்சேன்...அப்டினு இயக்குநர் கௌதம் மேனன் ரசிச்சு ரசிச்சு பண்ணுன ஒரு Fan Boy சம்பவம் தான் வேட்டையாடு விளையாடு.
இப்ப லோகேஷ் கனகராஜ் எப்படி கமல் ரசிகனா ஒரு விக்ரம் படம் குடுத்தாரோ..அப்டிதான் அப்போ கௌதம் மேனன் குடுத்திருந்தாரு...ஆயிரம் அன்புச்செல்வன் வந்தாலும் ஒரு ராகவனுக்கு ஈடாக முடியாதுனு சூர்யாவும் சிலாகிச்சு சொல்லிருந்தாரு.
கமலோட சிரிப்பு, அழுக, கோபம், கம்பீரம், ஆக்ஷன் அதிரடினு அத்தனைக்கு தீனி போடுற மாதிரியான படம் தான் வேட்டையாடு விளையாடு. . இவ்ளோ ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கும் போது காதல் இல்லாமலா...
கமல் ரசிகர்களுக்கு எவ்ளோ பெரிய ட்ரீட்டா இந்த படம் இருந்துச்சோ..அதே மாதிரி சர்ப்ரைஸா இருந்துச்சு, டேனியல் பாலாஜி நடிச்ச அமுதன்கிற கேரக்டர்...அமுதன், இளமாறன்னு ரெண்டு வில்லன்கள் இருந்தாலும் இளமாறனுக்கு கௌதமே குரல் குடுத்திருந்தாலும், ஆடியன்ஸ் அத்தன பேரையும் மிரள வெக்கிற மாதிரி மிரட்டலான பெர்பாமன்ஸ் குடுத்திருப்பாரு டேனியல் பாலாஜி...உன் போலீஸ் friend எப்டி கெஞ்சி கதறி செத்தான் தெரியுமா..Surprising for a policemanநு ஆரமிச்சு கமலுக்கு தங்களோட Flashback அ சொல்றதாகட்டும்..ஜோதிகாவ கடத்த அவங்க வீட்டிக்கு போய்ட்டு english பாட்டுக்கு டான்ஸ் ஆடுறதாகட்டும்..கிளைமேக்ஸ்ல சாகாவரம் டயலாக் சொல்லும் போதாகட்டும்...தமிழ் சினிமா மறக்க முடியாத ஒரு வில்லன் இந்த அமுதன்.
கமல், கௌதம், டேனியல் பாலாஜிக்கு இணையா படத்துக்கு பெரிய பலமா இருந்தது ஹாரிஸ் ஜெயராஜோட இசை...டைட்டில் கார்டுல கற்க கற்க சாங் ஒட டியூன் யூஸ் பண்ணதுல தொடங்கி, அமெரிக்கால கதை நகரும் போது ஒரு விதமான BGM...கீரனூர் ல நடக்கும் போது ஒரு விதமான BGM...வில்லன்களுக்கு நாதஸ்வரத்த வெச்சே ஒரு மிரட்டலான BGMநு செதுக்கி இருப்பாரு...இது போக பாடல்கள் ஒவ்வொன்னும் செம்ம ஹிட்.
வேட்டையாடு விளையாடு 2 கண்டிப்பா எடுப்பேன்னு கௌதம் சில பேட்டிகள்-ல சொல்லிருக்காரு...அதுக்கு ரசிகர்கள் காத்திட்டு இருக்கும்போது இப்போ இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகுறது ரசிகர்களுக்கு செம உற்சாகத்த குடுத்துருக்கு...அடுத்து ஆளவந்தானும் கொஞ்ச நாள்ல வரப்போறாரு...ஆனா வர்ற 23ம் தேதி...Its DCP Ragavan's Re-entry.