"தாராபுரத்தை சேர்ந்தவர் இறந்ததில் தவறு நடந்ததா? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
கோவை அரசு மருத்துவமனையில் தாராபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நடந்ததா என விசாரித்து வருவதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். கோவை பீளமேட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் முகாமை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது தாராபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவம் குறித்து நிருபர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கோவை அரசு மருத்துவமனையில் தாராபுரத்தைச சேர்ந்தவர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நடந்துள்ளதா என விசாரித்து வருகிறார்கள் என்றும் அவ்வளவு மோசமான நிலைமையில் கோவை அரசு மருத்துவமனை இல்லை என்பது தான் உண்மை என்றும் கூறினார்.