ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த தவான் | IPL | Shikhar Dhawan | Record | Cricket | ThanthiTV
ஐபிஎல் போட்டிகளில் 50 முறை 50க்கும் அதிகமான ரன்கள் எடுத்த 2வது இந்திய வீரர் என பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தவான், 86 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் தனது 48வது அரைசதத்தை ருசித்த தவான், விராட் கோலிக்குப் பிறகு 50க்கும் அதிகமான ரன்களை 50 முறை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை 208 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள தவான், 6 ஆயிரத்து 369 ரன்கள் எடுத்துள்ளார்.