கேள்வி கேட்ட பொதுமக்கள்... ஆபாசமாக திட்டி அடிக்க பாய்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்களின் கணவர்கள்

Update: 2023-03-23 02:41 GMT
  • தர்ம‌புரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிராமசபை கூட்டங்களில் கேள்வி கேட்ட பொதுமக்களை, ஊராட்சி மன்றத் தலைவர்களின் கணவர்கள் ஆபாசமாக திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காட்டம்பட்டி, கெண்டேனஹள்ளி ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
  • அப்போது, ஊராட்சி பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
  • இதற்கு பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதிலளிக்காத நிலையில், அவர்களது கணவர்கள் ஆபாச வார்த்தைகளால் கேள்வி கேட்டவர்களை திட்டினர்.
  • அப்போது, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்