திருப்பதியில் குவியும் பக்தர்கள்.. 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

Update: 2022-11-27 12:41 GMT

வார விடுமுறையை ஒட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், தனியார் பேருந்துகளில் வருகை தந்துள்ளனர்.

இதனால், மலை அடிவாரத்தில் உள்ள வாகன காத்திருப்பு இடம் முழுமையாக நிரம்பியால், சாலைகளின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அதிக அளவிலான பக்தர்கள் வந்ததால், இலவச டோக்கன்கள் இல்லாமல், இலவச தரிசனத்திற்காக 40 மணி நேரம் வரை காத்திருக்கிறார்கள்.

இலவச டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் மூன்று முதல் ஐந்து மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்