ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில் சரக்கு ரயில்கள் தடம் புரண்டதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திராவில், தாடி மற்றும் அனகாபள்ளி இடையே சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால், விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 6 பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதே போன்று, மேற்கு வங்க மாநிலம், சில்குரி அருகே, காலை 11:10 மணியளவில் சரக்கு ரயிலின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டன. விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள், 3 மணி நேரத்தில் ரயில் பெட்டிகளை மீட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர்.