தடம் புரண்ட சரக்கு ரயில் பெட்டிகள்.. ரயில் சேவை பாதிப்பு - கிருஷ்ணகிரியில் பரபரப்பு

Update: 2023-04-21 16:32 GMT

கிருஷ்ணகிரி அருகே சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பானது...

தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயில், உரம் மூட்டைகளுடன் பெங்களூரு நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. தருமபுரி வழியாக சென்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில், அதிகாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது, அதன் ஆறு பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் - யஸ்வான்பூர், தாமாபுரி - பெங்களூரு, பெங்களூரு - ஜோலார்பேட்டை ஆகிய வழித்தடங்களில் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் தருமபுரி - ஓசூர் வழித்தடத்திற்கு பதிலாக ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் - சேலம் வழியாக திருப்பிவிடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்